செரிமானம் என்பது நமது உடலில் முறையாக நடக்க வேண்டிய ஒரு விஷயமாகும். இந்த செரிமானமானது நாம் உணவை சாப்பிட்ட பிறகு நடக்கும் ஒரு நிகழ்ச்சி என நாம...
செரிமானம் என்பது நமது உடலில் முறையாக நடக்க வேண்டிய ஒரு விஷயமாகும். இந்த செரிமானமானது நாம் உணவை சாப்பிட்ட பிறகு நடக்கும் ஒரு நிகழ்ச்சி என நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவ்வாறு இல்லை. செரிமானம் என்பது ஒரு உணவை பார்த்த உடனேயே அல்லது நினைக்கும் போதே நமது நாவில் சுரக்கும் எச்சில் தான் செரிமானத்திற்கான முதல் படியாகும். எனவே இந்த செரிமானமானது நாம் சாப்பிடுவதற்கு முன் பின் நடக்கும் சில விஷயங்களை பொருத்தும் அமையும் என்பதால் நாம் சாப்பிடுவதற்கு முன்னர் என்ன செய்கிறோம், பின்னர் என்ன செய்கிறோம் என்ற விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.